
சில நேரங்களில்
நிமிடங்களாய்
மணிகளாய் காலங்கள்
கடந்த போதும்
மறந்து விட தோன்றுகிறது.
எழுது – என்றால்
இன்னொரு நாள் என்கிறது
சோம்பல் மனது
தள்ளி தள்ளி,
போகிறது – என்றோ
உன் நினைவான அந்த கவிதை!



உலகம் வலையின் கதகதப்புக்குள் சுகமாய் முடங்கிக்கிடக்கிறது. வலையுலகைத் தவிர்த்துவிட்டு சுற்ற முடியாதளவு பூமியின் பயணம் குறுகிப்போயிருக்கிறது. அறிவின் சேகரங்களைச் சேகரித்துக்கொண்டு பயணித்துக்கொண்டிருக்கும் வலையுலகின் ஏதாவதொரு கண்ணியில் எனது சிறகுகளும் இணைக்கப்படட்டும். ஒவ்வொரு அரிசியிலும் இறைவன், பெயர் எழுதியிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கும் கதைகளை மனசு நம்ப மறுத்தாலும் உலகின் ஒவ்வொரு மணல் துகளிலும் என் காலடித்தடங்களின் தூசு படிய வேண்டும் என்கிற பேராசை மட்டும் இருக்கிறது. சாத்தியப்படும்போது சந்திப்போம். உள்ளம் திறந்து உரையாடுவோம்.